Sunday, 4 September 2016

12 ஜோதி லிங்கங்கள் உள்ளன இவையே அற்புத ஆற்றல் படைத்த சிவஜோதி லிங்கமாகும்.

சிவ ஆற்றல் பெற மந்திரங்கள் மற்றும் சிவலிங்கத்தின் வகைகள்


                                                             " குருவடி சரணம் "
                                                            "  திருவடி சரணம்  "

“ குரு பாதம் மந்திரத்துக்கு முக்கியம்
குரு வார்த்தை தியானத்திற்கு முக்கியம்
குரு வடிவம் மோட்சத்திற்கு முக்கியம்
உங்களை விழிக்க செய்பவர்தான் குரு “
                                   
" ஞானிகளைப்  பூஜிப்போம் "                        " அன்னதானம் செய்வோம் "  

" ஞானம் பெற்று வாழ்வோம் "                  " கர்மவினையைத் தகர்ப்போம் " 
 
சிவ ஆற்றல் பெற மந்திரங்கள் 

சிவலிங்கத்தின் சுடரின் சிவன் பிரம்மா விஷ்ணு உள்ளார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது விளக்கு எறியும் போது அதன் ஜோதியில் தெரியும் மஞ்சள் நிறம் பிரம்மாவின் நிறம், நடுவில் கருப்பு விஷ்ணுவின் நிறம் மேலே சிகப்பு சிவனின் நிறம். ஆகவே ஜோதியானது மும்மூர்த்தியின் சொரூபம் என்பதை உணர்வதுடன் கோவிலில் வைத்துள்ள லிங்கம் அடிபகுதி பிரம்ம பாகம் நடுபீடம் விஷ்ணு பாகம் மேல் லிங்கமாக இருப்பது சிவனாகும். ஆதியில் ரிஷிகள் ஆங்காங்கே இயற்கையால் ஏற்பட்ட ஜோதியை அல்லது செயற்க்கையான தீபஜோதியை வழிபட்டு இருக்கிறார்கள். அந்த வழிபாடு தொடர்ந்து நடைபெற அதையே லிங்கத்தில் பிரதிஷ்டை செய்து ஜோதி லிங்கமாக நமது முன்னோர்கள் வழிபட்டார்கள் அந்த அடிப்படையில் இந்தியாவில் 12 ஜோதி லிங்கங்கள் உள்ளன இவையே அற்புத ஆற்றல் படைத்த சிவஜோதி லிங்கமாகும்
1.       பீமசங்கர் (பூனே மாவட்டம்)
2.       திரியம்பகேஸ்வரர் (நாசிக் மாவட்டம்)
3.       குஷிமேஸ்வரர் (அவுரங்காபாத்)
4.       வைத்தியநாதர் (பீடு மாவட்டம்)
5.       நாகநாதர் (பார்பாணி)
6.       சோமநாதர் (குஜராத்)
7.       ஓங்காரிஸ்வரர் (உஜ்ஜைனி)
8.       மகாகாளர் (உஜ்ஜைனி)
9.       கேத்தரநாத் (உத்தராஞ்சல்)
10.   விஸ்வநாதர் (காசி)
11.   ராமநாதர் (இராமேஸ்வரம்)
12.   மல்லிகார்ஜுனா (ஸ்ரீசைலம், ஆந்திரா)
சிவபூஜை செய்யகூடியவர்கள் அவசியம் பரமேஸ்வரன் சக்கரம் அல்லது சிதம்பர சக்கரம் வைத்து பூஜை செய்தால் மட்டும் பலன்கிடைக்கும் என்பதை அறியுங்கள்.
சிவனை வழிபட முறையான மந்திரத்தை எவரும் உச்சரிப்பதாலே சித்தர்கள் கண்ட சிவனை எவராலும் கண்டு தருசிக்க இயலவில்லை. கோரக்கநாதரின் சிவ மந்திரத்தை ஒவ்வொரு நாளும் உச்சரித்து வந்தால் அபிரிவிதமான ஆற்றல் கிடைக்கும்.
பஞ்சாச்சரங்கள் மூன்று வகைப்படும் 1. துலா பஞ்சாகரம் 2.சுக்கும பஞ்சாகரம் 3.காரண பஞ்சாகரம் என மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
துலா பஞ்சாகரம் மந்திரத்தை இல்லத்தில் இருப்போர் ஜெபிக்கவேண்டும். (ஓம் நமசிவாய). துலா உடலில் இருந்து தன்னை உயர்த்திகொண்டவர்கள் சுக்கும பஞ்சாகரம் மந்திரமாகிய (சிவாயநம) என உச்சரிக்கவேண்டும் இதன்மூலம் தம்மை தியான நிலைக்கு உயர்த்திக்கொண்டு முக்தி கிடைக்கும். இவர்கள் இந்நிலைக்கு உயர்த்தப்பட்டவர்கள் காரண பஞ்சாகரம் மந்திரம் படிக்கவேண்டும் (வயசி சிவ) என்ற மந்திரத்தை ஜெபிக்கவேண்டும். இவ்வாறு ஜெபித்தால் ஞானம் சித்திக்கும். மாகான் கோரக்கரின் வாக்குப்படி சிவனை காணவேண்டுமானால் ஒரே மாதிரியான தியானத்தில் ரேசக, பூரகம், கும்பித்து.“ஓம் அம் ஆம் ஊம் உம் அம் சிவாய நம சிவாய வசி என்று ஜெபித்தால் ஆறு மாதத்திற்குள் சிவன் காட்சி தருவார் என்று கூறியுள்ளார்.
சிவனுக்கு 5 முகங்கள் 1.தத்புருஷம். 2.அகோரம். 3.வாமதேவம்.4.சித்தியோசாதம். 5.ஈசானம்  என குறிக்கப்பட்டுள்ளது.

1.தத்புருஷம் – கிழக்கு நோக்கிய சிவன் இவர்க்கு நாம் ஜெபிக்க வேண்டிய மந்திரம் நம-சிவாய.
2.அகோரம்-தெற்கு நோக்கிய சிவன் இவர்க்கு ஜெபிக்க வேண்டிய மந்திரம் நமசிவ.
3.வாமதேவம்-வடக்கு நோக்கிய சிவன் இது சிவனின் மூன்றாவது முகம் இவர்க்கு ஜெபிக்க வேண்டிய மந்திரம் ஓம் ஐயும் கிழியும் சிவாய நம.
4.சித்தியோசாதம்- இது சிவனின் நான்காவது முகம் இவர்க்கு நாம் ஜெபிக்க வேண்டிய மந்திரம் ஓம்-சிவாய நம.
5.ஈசானம்-இது உச்சி இது சிவனின் மேல் நோக்கிய முகம் இதனை ஆகர்ஷனம் என்றும் கூர்ந்து இருப்பது இதுவே, இதர்க்கு சிதம்பரம் தில்லை நடராஜர் எனக்கொள்ளலாம் இவர்க்கு நாம் ஜெபிக்க வேண்டிய மந்திரம் ஊங் அங் நம ஓம் என்று உச்சரித்தால் சிவனை காணலாம் மேலும் சிவாய நம ஓம் சி அங் என்று உச்சரித்தால் யோகநிலையில் குண்டலி சக்தியை காணலாம் எனக்கூறபடுகிறது. .
 
சிவலிங்கத்தின் வகைகள்

தாராலிங்கம் வழிபாட்டுக்கு சிறந்தது அவைகள் 5 வகைப்படும். அவைகள்4,8,16,32,64 என விகிதத்தில் பட்டைகள் காணப்படும்.
4 பட்டை  வேதலிங்கம்.
8 பட்டை – நீர், நிலம், காற்று, ஆகாயம், சந்திரன், ஆன்மா,  
           இவைகளை உள்ளடைக்கியது.
16 பட்டை – சோடச தாராலிங்கம் (அ) சந்திரகலா லிங்கம் இது               குளிர்ச்சியான கல்லலில் இருந்து உருவாக்கப்பட்டது.
32 பட்டை – தர்மதாராலிங்கம்.
64 பட்டை – அபூர்வலிங்கம். இது சிவபெருமானின் 64    
            லீலைகளை  குறிக்கும்.

திருவம்பலம் சக்கரம் 51 எழுத்துக்களை உள்ளடிக்கிய சக்கரம் இது ஈ சாணம்  ஆகாயத்தை குறிக்கும்.
ஆகாயத்தை குறிக்க    – ஹம் சிவாய நம
வாயுவை குறிக்கும் – யம் மசிவாய
அக்னி குறிக்கும்    – ரம் நமசிவய
அப்பு குறிக்கும்      – வம் யநமவசி
மண் குறிக்கும் – லம்
எனவே சித்தர்கள் சிவாய நம என வடிவில் மானிட உடல் அமையபட்டுள்ளது என்றும் அவைகள் உடலில் 5 இடங்களில் அமையபட்டுள்ளது என்று கூறுகிறார்கள். நமவசிய என மந்திரத்தில் இந்த மானிட உடல் அமைந்துள்ளது என திருமூலர் கூறியுள்ளார்.
ஞானிகள் சித்தர்கள் யோகிகள் தவமுனிவர்கள் இவர்களிடம் திருநீர் வாங்கும் போது கீழ்க்கண்ட மந்திரத்தை மனதில் உச்சரித்து கொண்டு திருநீர் வாங்கவேண்டும். அப்போது அவர்களுடைய தவபலனில் உங்களுக்கு பலன்க்கிட்டுவதுடன் அவர்களுடைய குனாஅதிசியங்கலும் உங்களுக்கு வந்து சேரும் மந்திரம்.
ரும் றீம் சிம்ரா
ரும் றீம் சிம்ரா
ரும் றீம் சிம்ரா
மேற்கண்ட மந்திரங்களை உரிய முறையில் ஜெபிபீர்களானால் சிவன் ஆற்றல் கிடைக்கும் என்பது உறுதி.

 

பிரதி வாரம் வியாழன் மற்றும் பௌர்ணமி நாட்களில் பொதுமக்களுக்கு  அன்னதானம் வழங்கப் படுகிறது.ஜோதிடத்தில்  
உள்ள கிரக தோஷங்கள் விலக,சனியின் ஆதிக்கம் குறைய 
சிவன் அருள் சித்தர் மூர்த்தி கோரக்கர் மூலம் அன்னதானம் 
செய்து அருளாசி பெறுவீர்.

No comments:

Post a Comment